புல்டோசர் இடிப்புத் திட்டம் – ஓர் அறிமுகம்

"மனிதர்கள் தங்களது முகங்களில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருக்கும்போதும், இருமிக்கொண்டே, தடுமாறியபடி, அடுத்த பாதையைத் தேடிக்கொண்டும் கண்டுபிடித்துக்கொண்டும் முன்னேறுகிறார்கள். மனிதர்கள் எப்போதும் என்னை வியப்படையச் செய்துகொண்டே இருக்கிறார்கள்" - மார்கஸ் சுசாக்

In collaboration with maattru.in, The Polis Project is excited to publish The Demolitions Project in Tamil. Discussing the collaboration, Chinthan EP writes in an editor’s note: “When fascism grows in one part of the world, it is our duty to prevent its spread to other regions. Hindutva spreads like cancer. It is no longer possible to claim that Hindutva cannot penetrate South India.” Every Monday, we will publish a piece from our Demolitions archive, to bring the important documentation of the extrajudicial, punitive actions by the state to a wider audience.

சமீப காலங்களில் தொடர்கதையாகிப் போயிருக்கும் இந்த புல்டோசர் இடிப்புத் திட்டங்கள் என்பது, சட்டத்திற்குப் புறம்பாகவும், நீதிக் கட்டமைப்புக்கு எதிராகவும் நிகழ்த்தப்படுகிற ஒரு கொடூர நடவடிக்கையாகவே மாறியுள்ளது. சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி நடைபெற வேண்டிய ஒரு ஜனநாயக நாட்டில், கட்டிடங்களை இடித்துத் தள்ளும் இந்த புல்டோசர் தகர்ப்புத் திட்டத்தினால் சட்டத்தின் ஆட்சிக்கு அவமதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு ஏராளமான எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக கண்டனம் தெரிவித்துக் கொண்டேதான் இருக்கின்றனர். ஆனால் இன்றைய இந்தியாவில், ‘சட்டத்தின் ஆட்சி’ எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த புல்டோசர் இடிப்புத் திட்டம் ஒரு மிகப்பொருத்தமான உதாரணமாகத் திகழ்கிறது. இந்த புல்டோசர் திட்டம் உருவாக்கப்பட்டதே ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த மக்களை அழிப்பதற்கும், குற்றம் செய்யாவிட்டாலும் அவர்களை தண்டிப்பதற்கும்தானே தவிர, குற்றங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கவோ, அவர்களுக்கான மறுவாழ்வை உறுதி செய்வதற்கோ அல்ல. சட்டப்படி பார்த்தால், புல்டோசரைக் கொண்டு இப்படியாக ஒரு கட்டிடத்தை இடிக்கும் புல்டோசர் இடிப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றால், அதற்கென்று முறையான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நம்பவைக்கப்பட்டாலும், நடைமுறையில் அதிகாரத்தில் உள்ளவர்களின் கையில் சிக்கிய ஆயுதமாகவே இது மாறியிருக்கிறது. இஸ்லாமிய மக்களின் அமைதியான வாழ்வை அழித்து, எந்தத் தவறும் செய்யாத அவர்களை தண்டனைக்குரியவர்களாக மாற்றுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. மேலும், அது சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மக்களை பாரபட்சமின்றி ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்குகிறது. அத்துடன், முதலாளிகளின் நலன்களுக்காக சட்டமும், அரசின் கட்டமைப்புகளும் வளைந்து கொடுக்கும்…


LockIcon

Join us